tamilnadu

வட மாநில தொழிலாளர்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் காவல்துறை சிஐடியு கண்டனம்

காஞ்சிபுரம், பிப்.9- வடமாநில தொழிலாளர் களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் காஞ்சி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என சிஐடியு வேண்டுகோள் விடுத்துள் ளது.  இது குறித்து காஞ்சி புரம் மாவட்ட சிஐடியு  மாவட்டத் தலைவர் எஸ்கண்ணன். செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- வடமாநிலத் தொழி லாளர்களை சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போல சித்தரிக்கும் விதத்தில், சம்பந்தப்பட்ட தொழிற் சாலை நிர்வாகிகள் இவர்களை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் அறிவுறுத்தியிறுப்ப தாக பிப். 7 மற்றும் 8 ஆம் தேதி நாளிதழ்களில் வெளி வந்த செய்தியை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் பயணிக்கவும் பணிபுரியவும் நமது அரசியலமைப்புச் சட்டம் உரிமை அளிக்கிறது.  இந்திய தொழிலாளர்களை வட இந்திய தொழிலாளர் என்கிற முறையில் அடை யாளப்படுத்துவதும், அவர்களை சமூகவிரோதச் செயல்களோடு தொடர்பு படுத்தி பேட்டி அளிப்பது,  உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் இப்படி கூறு வது ஏற்புடையது அல்ல. காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை இடம் பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தின் படி பராமரிக்க வும், அவர்களுக்கான பணி,  உயிர் பாதுகாப்பு, தங்கு மிடம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உறுதி செய்திட தொழிலாளர் நலத்துறை தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வட மாநில தொழிலாளர்களை சமூக விரோதிகள் போல சித்தரிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.