districts

img

தொழிலாளர்கள் பணி நீக்கம்: சிஐடியு கண்டனம்

செங்கல்பட்டு, மே 27 - மறைமலை நகரில் கர் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென  பணி நீக்கம் செய்யபட்ட 23 தொழிலாளர்க ளுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி  சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் டேஜங் மொபர்ட்ஸ் என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தொழிற்சங்கம் துவங்கப்பட்டு ஊதிய  ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி தொழிற்சாலை நிர்வாகம் திடீரென 23  தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.  மேலும் கடந்த மாதத்திற்கான ஊதியத்தை யும் வழங்காமல் இழுத்டித்து வருகிறது. பணி நீககம் செய்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், தொழிலாளர் நலத் துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலை வாயில் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்டச்  செயலாளர் டி.பாபு, விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சண்முகம், சிஐடியு நிர்வாகி சிவா ஆகியோர் பேசினர்.