districts

img

கரூர் வருவாய் கோட்டாட்சியரின் அராஜக செயலுக்கு சிஐடியு கண்டனம்

கரூர், ஏப்.11 - மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் போராட்ட பேனரை கிழித்து அராஜகமாக நடந்து கொண்டார். இச்செயலை கண்டித்தும், மணல் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு குவாரிகளை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் சிஐடியு கரூர் மாவட்டக்குழு, கரூர் மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.முருகேசன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.