முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவை உயர்த்தப்படுகிறதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000-இல் இருந்து ரூ.35,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000-இல் இருந்து ரூ.17,500 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஏபரல் 1-ஆம் தேதி முதல் இந்த ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வருகிறதாக அவர் தெரிவித்துள்ளார்.