பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது, பழிபோடும் விளையாட்டுக்கு பஹல்காம் தாக்குதலும் மற்றோர் உதாரணமாகிவிட்டது. இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஆகையால், பொறுப்பான நாடாக பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என்று தெரிவித்துள்ளார்.