tamilnadu

img

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் நேரடியாக சிறை!

சென்னை,ஏப்.26- மருத்துவ கழிவுகளைக் கொட்டினால் இனிமேல் நேரடியாகச் சிறை என்கின்ற சட்ட முன்முடிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறைத்தண்டனை அளிக்கச் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை அமைச்சர் ரகுபதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். 
மருத்துவக் கழிவு பொதுச் சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அண்டை மாநில மருத்துவக் கழிவுகள் நமது மாநிலத்தில் கொட்டப்படுவதாக அடிக்கடி புகார்கள் பெறப்படுகின்றன. மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால், விதிகளை மீறியதாகத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் ரகுபதி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.