states

img

அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் காஷ்மீர் மாணவர்கள் - காவல்நிலையத்தில் சிபிஎம் மனு

உத்தரகண்ட் மாநிலத்தில் காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அம்மாநில காவல் நிலையத்தில் சிபிஎம் புகார் மனு அளித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்கும், மாணவர்களும் அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அம்மாநிலத்தில் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், இந்த அச்சுறுத்தல்களை தடுக்க கோரியும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் சிபிஎம் பிரதிநிதிகள் குழு காவல்துறையில் மனு அளித்தது.
இந்த பிரதிநிதிகள் குழுவில், கட்சியின் உத்தர்காண்ட் மாநிலச் செயலாளர் ராஜேந்திர புரோகித், மாவட்டச் செயலாளர் சிவபிரசாத் தியோலி, டேராடூன் செயலாளர் ஆனந்த் ஆகாஷ், மூத்த தலைவர்கள் சுரேந்திர சஜ்வான், ஹிமான்ஷு சவுகான், பகவந்த் பயல், அய்யாஸ் கான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.