கள்ளக்குறிச்சி, மே 9- பேரிடர் காலத்தில் நியா யவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட் களை தரமாகவும், சரி யான எடையுடனும், குறை பாடுகளை களைந்தும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சி யின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது பொது விநியோக திட்டத்தின் மூலம் ஒரு நப ருக்கு 5 கிலோ அரிசி கூடுத லாக வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள் ளது. ஆனால் தமிழக அரசு இதனை ஒரு குடும் பத்திற்கு 5 கிலோ என தன்னிச்சையாக குறைத்து அறிவித்துள்ளது. இதேபோல மாதந் தோறும் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ சர்க்கரை வழங் கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு கிலோவாக குறைத்து வழங்கப்படுகிறது.
எனவே நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசியும், குடும்பத்திற்கு 2 கிலோ சர்க் கரையும் ‘வழங்க வேண்டும். நியாயவிலை கடை களில் ரூ 500க்கு வழங்கப்ப டும் 19 பொருட்கள் கொண்ட தொகுப்பு அந்த மதிப்பிற்கு ஏற்ப இல்லாமல் அளவு குறைவாக உள்ளது. மேலும் சமையலுக்கு பயன்படுத்த முடியாத வகையில் தரம் குறைவாகவும் உள்ளது. எனவே சரியான அளவுடன், தரமான பொருட்களாக வழங்க வேண்டும். ‘அத்தியாவசிய பொருட் களை வாங்குவதற்காக பொதுமக்கள் நகர்ப்புறங் களில் உள்ள கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல் கின்றனர். இதனை தவிர்த்திட நியாயவிலைக் கடைகளின் மூலம் அனைத்து பொருட்க ளையும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடி தத்தில் கூறப்பட்டுள்ளது.