tamilnadu

தேனி மாவட்டத்திற்கு ரூ.1,000 வழங்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

தேனி, ஜூன் 28- கொரோனா தடுப்பு நடவ டிக்கையாக தேனி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு களால் பொது மக்களின் வாழ்வா தாரம் பதிப்பட்டுள்ளதால் குடும் பத்திற்கு தலா ரூ 1000 வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது . கட்சியின் மாவட்டச் செயற் குழு கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.கண்ணன் தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர். சங்கரசுப்பு, ஏவி.அண்ணாமலை, ஜி.எம்.நாகராஜன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் குறித்து கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் டி. வெங்கடேசன் கூறியதாவது:- தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500- ஐ தொட்டு விடும் நிலையில் தேனி மாவட் டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகிறது.  

டீ கடை, நகை மற்றும் ஜவுளி கடைகள், பெட்டிக் கடைகள், டிவி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்  விற்பனை  நிலை யம், ஸ்டேஷனரி கடைகள் உள்ளிட்டவைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடை தவிர ஏனைய மற்ற  கடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் நேரக் கட்டுப் பாடு விதித்துள்ளது. இதன் கார ணமாக சிறு வர்த்தகர்கள் ,தொழி லாளர்கள்  கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளனர்.  கேரளாவில்  ஏலத்தோட்டங் களுக்கு செல்லும் 30 ஆயிரத்திற் கும் மேற்பட்ட தோட்டத் தொழிலா ளர்கள், 1,000 க்கும் மேற்பட்ட ஜீப் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ள னர். தேனி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மதுரை மாவட்டத்தில் அமல் படுத்தியது போல் தேனி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.