districts

செங்கிப்பட்டி சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

தஞ்சாவூர், நவ.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூத லூர் தெற்கு ஒன்றியக் குழு சார்பில் துணைக்  குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு  மற்றும் கிளைச் செயலாளர்கள் கூட்டம் செங்  கிப்பட்டியில் நடைபெற்றது.  சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ்ச் செல்வி, என்.வி.கண்ணன் ஆகியோர் பேசி னர்.  கூட்டத்தில், ‘‘செங்கிப்பட்டி கடைவீதி யில் உள்ள பொதுக்கழிப்பறை செயல்படா மல் உள்ளது. இதன் காரணமாக கடை வீதிக்கு வரும் பொதுமக்கள், பயணிகள் கடும் அவ திப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுக் கழிப்பறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  செங்கிப்பட்டி முக்கிய வீதிகள் மற்றும் கடைவீதியில் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலைப் பணியை ஒப்பந்தம் செய்துள்ள மதுக்கான் நிறுவனம் முறையாக சாலையை பராமரிப்பதில்லை. இது குறித்து,  பலமுறை போராட்டங்கள் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு வெண்மணி தியாகி கள் நினைவு ஜோதி பயணக் குழு அகில இந்திய இணைச் செயலாளர் பி.ஜூ.கிருஷ்ணன் தலைமையில் வருகிறது. இப்பய ணக்குழுவுக்கு, டிசம்பர் 7ஆம் தேதி செங்கிப்பட்டியில் பிரம்மாண்டமான வர வேற்பு அளிப்பது, நவம்பர் 26-ஆம் தேதி சென்னை விவசாயிகள் பேரணியில் திரளாக  பங்கேற்பது’’ என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.