மன்னார்குடி, நவ.23- நீடாமங்கலம் ரயில்வே மேம்பால பணி களை துவங்குவதற்கு போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ள வையகளத்தூர் பழைய நீடாமங்கலம் இணைப்பு பாலத்தின் கட்டுமான உறுதி யை ஆய்வு செய்ய வல்லுநர் குழு நியமித்து அதன் நம்பகத்தன்மையை பற்றிய மக்க ளின் அச்சத்தை போக்க வேண்டும் என திரு வாரூர் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நீடாமங்க லத்தில் செய்தியாளர்களிடம் புதனன்று தெரிவித்ததாவது:- நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கான முயற்சிகள் ஆமை வேகத்தில் நடைபெறு வதாக தெரியவருகிறது. இப்பாலம் இல்லா ததால் தொடர்ந்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அனுபவிக்கும் சிரமங்கள், துய ரங்கள் ஏராளமானவை. கும்பகோணம்-வேளாங்கண்ணி-மன்னார்குடி-தஞ்சாவூர் சாலையில் மிகப் பெரும் போக்குவரத்து நெருக்கடியை நீடா மங்கலம் ரயில்வே கேட் (எல்.சி.20) உரு வாக்கி வருகிறது. தினசரி 10 முறைகளுக்கு மேல் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்ப தால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி வளர்ந்து வருகிறது. இப்பிரச்சனையின் தாக்கத்தைப் பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டுவர நவம்பர் 28 அன்று அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து தொடர் மறியல் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்போராட்டத்தை முன்னின்று வலிமை யாக நடத்தவும் அனைத்து தரப்பு மக்களை யும் திரட்டுவதற்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு முடிவு செய்துள் ளது. நீண்ட கால பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர மேம்பாலப் பணிகளுக்கான முயற்சிகளை மறு ஆய்வு செய்து துரித நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். மேம் பாலப் பணிகளை ஆய்வு செய்வதற்கும் துரிதப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட துறையினரை அழைத்து மாதந்தோறும் பரிசீலனை கூட்டங்களை நடத்தி அதன் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும்.
வையகளத்தூர் இணைப்புப் பாலம்
மேலும் நாகை சாலையை இணைக்கும் வையகளத்தூர் பழைய நீடாமங்கலம் இணைப்புப் பாலத்தின் கட்டுமான உறுதி யைப் பற்றி ஆரம்பத்திலிருந்தே அப்பகுதி மக்களுக்கு கவலையும் அச்சமும் இருந்து வந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக, நீடாமங்கலம் ரயில்வே கேட் மூடப்படும்போது இப் பாலத்தை மட்டுமே மாணவர்களும், பொது மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். பெரும் மழை காலங்களில் ஆற்றில் நீர் மட்டம் உயரும்போது மிகப்பெரும் விபத்து ஏற்படுமோ என்ற கவலை உருவாகி உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இப்பாலத்தை நேரில் ஆய்வு செய்து கட்டுமான பொறி யியல் வல்லுநர்களை கொண்ட ஒரு குழு வை அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இதன் மூலம் அப்பாலத் தின் நம்பகத்தன்மை பற்றிய அச்சத்தை போக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.