கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் அம்பேத்கர் நகரில் உடைந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பத்தை மாற்றித் தர வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மின்சார வாரிய அலுவலரிடம் மனு அளித்தனர். அதையொட்டி அந்த மின் கம்பம் மாற்றப்பட்டது. வாலிபர் சங்க நிர்வாகிகள் மின் ஊழியர்களுடன் மின் கம்பம் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.