tamilnadu

img

நரிக்குறவர்களுக்கு  100 நாள் வேலை கேட்டு மனு

 சிதம்பரம், செப். 30- காட்டுமன்னார்கோயில் வட்டம் குமாரகுடியில் நரிக்குற வர்கள் 40 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான வேலை உறுதிக்கான அட்டை வழங்கப் பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாகியும் இதுநாள் வரை அவர்  களுக்கு வேலை கொடுக்கவில்லை. அவர்களுக்கு 100 நாள்  வேலை கேட்டும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், கீரைப் பாளையம் ஒன்றியச் செயலாளர் நெடுஞ்சேரலாதன், புவன கிரி ஒன்றியச் செயலாளர் மணி, நரிக்குறவர் பகுதி கிளைச்  செயலாளர் ராஜி, அப்பகுதியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட  மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கோரிக்கை குறித்து மனு கொடுத்தனர்.  இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் வரும் வாரத்தில் இருந்து இவர்களுக்கு வேலை கொடுக்கப்  படும் என்றும் நான்கு ஆண்டுகளாக ஏன் வேலைகொடுக்க வில்லை. அதில் முறைகேடு நடந்து இருந்தால் சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பேரில்  அனைவரும் கலைந்து சென்றனர்.