districts

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் 100 நாள் வேலைக்கு அனுமதி

விழுப்புரம், ஜூலை 21- இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணி யாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்க ளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கும், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வய துக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் பெரிய  அளவில் ஆர்வம் காட்டவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18.49 லட்சம்பேர் உள்ளனர். தினசரி 100க்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசி போடா தவர்கள் அதிகம் உள்ளதால் தேசிய ஊரக வேலை திட்டத்தில்  பணியாற்ற வருகிறவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றி தழ் காட்டினால் தான் வேலை வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவித்தது. இதனால் தற்போது கிராமப் புறங்களில் தடுப்பூசி போட்டுகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.