districts

img

திட்டத்தின் பெயரோ 100 நாள் வேலை: கொடுப்பது 10 நாள்தான்! திருவள்ளூர் பிரச்சாரத்தில் பெ.சண்முகம் சாடல்

திருவள்ளூர், மார்ச் 6- கிராமப்புற வேலை உறுதிதிட்டத்தை, பத்து நாள் வேலை திட்டமாக மாற்றிட முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கேட்டுக்கொண்டார். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக்கி ரூ.600 தினக்கூலியாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் திரு வள்ளூர் மாவட்டத்தில் பிரச்சார நடை பயணம் திங்களன்று (மார்ச் 6) துவங்கியது. பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியத்தில் திங்களன்று (மார்ச் 6) நடைபயணம் நடைபெற்றது. திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதி களில் மார்ச் 8 அன்றும், சோழவரம், ஊத்துக்கோட்டை,  பூந்தமல்லி ஆகிய இடங்களில் ஆங்காங்கே பிரச்சார நடை பயணம் மேற்கொள்கின்றனர். கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறு புழல்பேட்டையில் துவக்கிய பிரச் சாரத்திற்கு சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மீஞ்சூரில்  சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன் ஆகியோர் தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பொன்னேரி அருகில் உள்ள தச்சூர்கூட்டுச்சாலையில் துவக்கிய நடைபயணத்திற்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் என்.நித்தியானந்தம், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.தவமணி, சிஐடியு மாவட்ட நிர்வாகி எஸ்.எம்.அனீப் ஆகியோர் தலைமையில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் இந்த பிரச்சாரத்தை துவக்கி வைத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.சண்முகம் பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு உழைக்கும் மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை நடத்திக் கொண்டு வருகிறது”என்றார். கிராமப்புற ஏழை-எளிய மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமான 100 நாள் வேலை திட்டத்தின் நிதியை மோடி அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டு வருகிறது. திட்டத்தின் பெயர் 100 நாள் வேலை திட்டம். ஆனால், வேலை கொடுப்பது பத்து நாள் திட்டமாக மாற்றி வருகிறது என்றும் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடினார்.