tamilnadu

விவசாயிகளுக்கு விரோதமாக ஒப்பந்தம் போட்டுவிட்டு தான் ஒரு விவசாயி என்று தம்பட்டம் அடிக்கும் தமிழக முதல்வர்

விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் சாடல்

கோவை, நவ. 5– விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை கேள்விக்குள்ளாக்கி விவ சாயிகளுக்கு விரோதமாக விவசாய  சாகுபடி ஒப்பந்தம் போட்டுவிட்டு தான் ஒரு விவசாயி என்று தம்பட் டம் அடிப்பதை முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நிறுத்த வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண் முகம் சாடியுள்ளார். ஆசிய - பசிபிக் மண்டல பொரு ளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தை கண்டித்தும், தமிழக அரசு அண்மை யில் நிறைவேற்றியுள்ள ஒப்பந்த  சாகுபடி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்தும், கோவை சூலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர் பி.சண்முகம் பேசுகையில், இந் திய குடியரசு தலைவர் தமிழ்நாடு அரசு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டார் என்று ஒரு நீண்ட அறிக் கையை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அண்மையில் வெளி யிட்டார். அதில், விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்கு நல்ல  சட்டத்தை கொண்டு வந்திருக்கி றோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இச்சட்டம் முழுமையாக ஆதரிக்கப் பட்டதாகவும், தமிழ்நாடு சட்டமன்றம் அனுப்பிய தீர்மானத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துவிட்ட தாகவும், இது விவசாயிகளின் வரு மானத்திற்கு உத்தரவாதம் அளிக் கும் என்று தெரிவித்துள்ளார். 

எங்கள் கேள்வி என்னவென்றால் தமிழ்நாடு விவசாயிகளின் வருமா னத்தை பெருக்க ஒரு சட்டம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது என்றால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதை விவாதித்தீர்கள் என்றால், இதனை முன்மொழிந்தது யார், முதல்வரா, வேளாண்துறை அமைச்சரா, இந்த சட்டத்தின் மீது பேசிய சட்டமன்ற  உறுப்பினர்கள் யார், எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் என்ன பேசினார்கள்  என்பதை விளக்க வேண்டும். யாருக் குமே தெரியாமல் ஒரு சட்டத்தை எப்படி சட்டமன்றத்தில் நிறைவேற்ற  முடியும். ஏகமனதாக நிறைவேற் றப்பட்டது என சொல்ல முடியும் என்பதே எங்களது கேள்வி. ஆனால், நாங்கள் விசாரித்த வரை எந்த எம்எல்ஏவும் இதுகுறித்து பேசியதாக தெரியவில்லை. இந்த சட்டம் குறித்து எந்த விவாதமும் நடை பெறாமல் சட்டமன்ற மேசையின் மீது வைத்துவிட்டு சட்டம் நிறை வேற்றப்பட்டதாக தெரிவித்துள்ள னர். விவசாயிகளின் நலனுக்கான சட்டம் என்று விவசாயி முதல்வர் தெரி விக்கிறார் என்றால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை  விவசாயிகளின் சங்கங்களை அழைத்து பேசியிருக்க வேண்டாமா.  இந்த சட்டத்தில் உள்ள சாதக, பாத கங்களை விவாதித்து நிறைவேற்றி யிருக்கலாமே. ஏன் ரகசியமாக நிறை வேற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி.

மேலும், எத்தனையோ சட்டங் கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக் காமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் உள்ளது. ஆனால், இச்சட்டத்திற்கு மட்டும் 40 நாளில் குடியரசு தலை வர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றால் இதன் பின்னணியை நாங்கள் சந்தே கிக்கிறோம். பல லட்சக்கணக்கான மாணவர்களின் நலனை பாதிக்கும் நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடிய ரசு தலைவரின் பார்வைக்கே செல்லவில்லை என தெரிவிக்கப்பட் டது. இவ்வளவு முக்கியமான சட் டத்தின் மீதெல்லாம் அக்கறை செலுத்தாத குடியரசு தலைவர் மாளிகை, இந்த சட்டத்திற்கு மட்டும் செப்டம்பர் மாதம் அனுப்பி அக்டோ பர் மாதம் ஒப்புதல் அளிக்கிறார் என்றால் இதன் அவசியம் என்ன என்பதே எங்களது கேள்வி.  இரண்டாவது, இந்த சட்டத்தால்  விவசாயிகளின் வருவாய் எப்படி  பெருகும். இந்த சட்டம் என்ன சொல்கிறது. உற்பத்தி செய்கிற விவ சாயியும், விளைவித்த பொருளை வாங்கி விற்பனை செய்யும் கார்ப் பரேட் வணிக நிறுவனம் இருவரும் இணைந்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதனை கோட்டாட் சியரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அரசு விலை விவகாரத் தில் தலையிடாது. விவசாயியும், சம் பந்தப்பட்ட வணிக நிறுவனமும் மட்டுமே விலையை தீர்மானித்து விடு வார்கள். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பது நீண்டகால மாக நடைமுறையில் உள்ளது. வேளாண் விளை பொருளை தீர்மா னிப்பதற்கென்று மத்திய அரசில் ஒரு கமிசன் உள்ளது. குறைந்தபட்ச விலையை அரசு தீர்மானிப்பதற்கு பதிலாக விவசாயி தானாக ஒரு வியாபாரியோடு விலையை தீர்மா னிப்பார் என்றால் இது எந்தவகை யில் விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும். இதுகுறித்து கேட்டால் நீங்கள் பேரம் பேசலாம், விலையை நீங்களே தீர்மானிக்கலாம் என்கி றார்கள். 

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அதிகமாக தேங்காய் உற்பத்தி நடைபெறுகிறது. கொப்பரை அதிக மாக உற்பத்தியாகிற இம்மாவட்டங் களில் விலையை தீர்மானிப்பது யார். மத்திய, மாநில அரசுகள் கொப்ப ரைக்காக குறைந்தபட்ச விலையை  தீர்மானம் செய்தாலும், சந்தையில் கொப்பரைக்கான விலையை தீர்மா னிப்பது குஜராத்தை சேர்ந்த நான்கு தொழிலதிபர்கள்தான் என்பதை அனைவரும் அறிவோம். அரசு அறி வித்த விலை கிடைப்பதில்லை குஜ ராத் தொழிலதிபர்கள் நிர்ணயிப்ப துதான் விலை என்கிற நிலைதான் தற்போது உள்ளது.  இதேபோன்று கரும்பு விவசாயி களும், சர்க்கரை முதலாளிகளும் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் கரும்புக் கான விலையை நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது வரை விவசாயிகளுக்கு ரூ.2 ஆயி ரம் கோடி சர்க்கரை ஆலை முத லாளிகள் பாக்கி வைத்துள்ளனர். இதனை பெற்றுக்கொடுங்கள் என்று அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக் கிறது. இதில் ஒரு படி முன்னேற்ற மும் ஏற்படவில்லை. ஒரு முதலாளி யையும் அழைத்து பேசுவதற்கு திரா ணியற்ற அரசாக இந்த அரசு உள் ளது. அமைச்சரே அழைத்தாலும் சர்க்கரை முதலாளி வருவதற்கு தயாரில்லை என்கிற நிலைதான் தற்போது உள்ளது.

இந்நிலையில் விவசாயிகளுக் கும், வியபாரிகளுக்கும் பிரச்சனை என வந்தால் கோட்டாட்சியர் அழைத்து பேசுவார் என்று தற் போதைய சட்டம் சொல்கிறது. முதல் வரோ, அமைச்சரோ அழைத்தாலும் முதலாளி வரமாட்டார் என்கிற நிலை யில் ஆர்டிஓ அழைத்து பேசுவார் என்று சொல்வது யாரை ஏமாற்றுகிற செயல் என்கிற கேள்வியைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம். இது மட்டுமல்ல முதலாளிகள் அனைவ ரும் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த  விலைக்குத்தான் வாங்குவோம் என்று நிர்பந்தம் செய்தால் விவசாயி களின் நிலை என்னவாகும். ஆகவே இந்த ஒப்பந்த சாகுபடி நிலை என்பது இனிமேல் அரசு விலையை தீர்மா னிக்காது என்பதற்கான நடவடிக்கை. குறைந்தபட்ச விலையை நாங்கள்  தீர்மானிக்கமாட்டோம். விவசாயி யும், சம்பந்தப்பட்ட வியாபாரியும் முடிவெடுக்கட்டும் என்று விவசாயிக ளின் நலனில் இருந்து விலகுவதற் கான நடவடிக்கைக்குத்தான், நான் ஒரு விவசாயி என சொல்கிற முதல்வ ரின் இந்த சட்டம் வழிவகுத்திருக் கிறது.

இச்சட்டத்தால் இயற்கை சீற் றத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீடு கிடைக்குமா கிடைக்காதா. நீயும் அவனும் ஒப்பந்தம் போட் டுள்ளீர்கள் நான் எதற்கு நிவாரணம் தரவேண்டும் என்று அரசு சொல் லுமா, சொல்லாதா என்பேத இப் போதைய கேள்வி. ஏற்கனவே அர சாங்கம் விவசாயத்தை விட்டு வில கிக்கொண்டிருக்கிறது. இருக்கிற கொஞ்சநஞ்ச குறைந்தபட்ச விலை நிர்ணய உரிமையில் இருந்தும் முழுமையாக விடுவித்துக் கொள்வ தற்குத்தான் இந்த சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு  விவசாயிகளுக்கு அதிமுக அரசு மிகப்பெரிய அநீதியை இழைத்தி ருக்கிறது. என்னுடைய நிலத்தில் எதை விதைக்க வேண்டும் என்பதை நான் தீர்மானித்திருக்கிறேன். இந்த  சட்டம் மூலம் எதை விதைக்க வேண் டும் என்பதை முதலாளி தீர்மானிப் பான் என்ற நிலையில், தமிழக மக்க ளுக்கு எது தேவை என்பதை உணர்ந்து விளைவிக்கும் விவசாயி சர்வதேச சந்தையில் எது தேவை என்பதற்காக விளைவிக்கும் நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். எனவே தமிழக அரசு  உடனடியாக இச்சட் டத்தை திரும்பப்பெற வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.