புதுச்சேரி,மார்ச் 29 – புதுச்சேரி மாநில அரசு சாராய முதலாளிக ளின் அரசாக செயல்படு கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் குற்றஞ் சாட்டினார். புதுச்சேரி அரசின் மின்துறை தனியார்மய நட வடிக்கைகளை கைவிட வேண்டும்.மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறந்து தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வழங்கப்படுவதைப்போல் அத்தியாவசிய பண்டங் களை வழங்க வேண்டும். தன்னாட்சிக் கூட்டுறவு நிறு வன ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்க வேண்டிய நிலுவை ஊதி யத்தை வழங்க வேண்டும். மூடிகிடக்கின்ற பஞ்சாலை களை திறக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை செயல் படுத்த வேண்டும். 8 மணி நேர, வேலை பணி பாது காப்பு, குறைந்தபட்ச ஊதி யத்தை புதுச்சேரி தொழி லாளர்களுக்கு கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி புதுச்சேரி சட்டப் பேரவை முற்றுகை போராட் டத்தில் வலியுறுத்தப் பட்டது.
பெ.சண்முகம்
புதுச்சேரி சட்டப் பேரவை அருகே நடை பெற்ற இந்த போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பெ. சண்முகம் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். அவர் பேசியதாவது, பாரம்பரியமிக்க பஞ்சாலை உள்ள மாநில மாக திகழ்ந்த புதுச்சேரியில் இன்றைக்கு வேலையில்லா திண்டாட்டம் தலை விரித் தாடுகிறது. ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் மக்கள்விரோத திட்டங்களை அமலாக்கும் மாநிலமாக உள்ளது. தனி யாருக்கு தாரை வார்க்கவே ஒன்றிய அரசு மின்சார ஒழுங்கு முறை சட்டம் 2022 கொண்டு வந்து உறுப்பினர்களின் எதிர்ப்பால் கிடப்பில் போடப் பட்டுள்ளது. ஆனால் புதுப் சேரியில் மின்சாரத்தை தனி யார்மயமாக்கும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ரேசன் கடைகளை திறப்ப தற்கு மாறாக மதுகடை களை வீதி வீதிக்கு திறக்கும் அரசு சாராய முதலாளி களின் அரசாக உள்ளது என்று என்.ஆர்.காங்கி ரஸ்,பாஜக கூட்டணி அரசை பெ.சண்முகம் குற்றஞ்சாட்டினார். இப்போராட்டத்தில் மூத்த தலைவர் தா. முருகன், மாநில செயற் கழு உறுப்பினர்கள் பெரு மாள், சுதா சுந்தரராமன், ராமச்சந்திரன், தமிழ்ச் செல்வன், சீனி வாசன், பிரபுராஜ், சத்தியா, கலியமூர்த்தி, இடைக்கமிட்டி செய லாளர்கள் மதிவாணன், ராம்ஜி, ராமமூர்த்தி அன்பு மணி உட்பட திரளானோர் பங்கேற்றனர். முன்னதகா காமராஜர் சிலையில் இருந்து ஊர்வல மாக வந்தவர்களை சட்டப் பேரவை அருகில் உள்ள ஆம்பூர் சாலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.