கடலூர், அக்.22- இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூபாய் 5000 வழங்க வலி யுறுத்தி கடலூர், விருத்தாசலம் நீதி மன்றங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் சங்கத்தின் தலைவர் எம்.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் கே. சிவராஜ், செயலாளர் ஜி.வனராசு, நிர்வாகிகள் அந்தோணிசாமி, சுந்தரம், பி.பரமேஸ்வரன், கே. சுரோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விருத்தாசலத்தில் மூத்த வழக்கறி ஞர் டி.முருகன் தலைமை தாங்கி னார். பூமாலை, குமாரசாமி, அம்பேத் கர், சங்கத்தின் செயலாளர்கள் இராமு, இப்ராஹிம், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குமரகுரு, சங்கரய்யா, வீரப்பன், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.