ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திங்கட்கிழமை முதல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டும் ,144 தடை உத்தரவினால் பல நெருக்கடிக்கும் தள்ளப்பட்டனர். இந்த சூழலில் கடந்த 3 வாரங்களாக காஷ்மீர் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
நேற்று ஸ்ரீநகரில் உள்ள மசூதிகளில் முதல்முறையாக தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் திங்கள் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.