போபால்,நவ.3- அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் சில நாட்களில் அறிவிக்கும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநி லத்தின் பதற்றமான பகுதியாக அறியப்படும் போபாலில் அடுத்த இரு மாதங்கள் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் தருண் பிதோர் ஆணையிட்டுள்ளார். கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பொது இடங் களுக்கு யாரும் செல்லக்கூடாது.இதனை மீறினால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பு உள்ளிட்ட வற்றை கருத்தில்கொண்டு மாநில போலீசார் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளது.