ஈரானில் உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானதில் 176 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து உக்ரைன் நாட்டின் போயிங்737 ரக விமானம் இன்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் இந்த விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்துள்ளதான ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்த விமானப்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் நுட்பக்கோளாறு காரணமான இந்த விபத்து நடத்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.