கடலூர், ஜூலை 23- காவிரி டெல்டாவை பாலைவன மாக்கும் முயற்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றாக ரத்து செய்ய வழிசெய்யும் விதத்தில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; காவிரிப் பாசன வடிநில மாவட்டங்கள் முழுவதையும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜூலை 23 செவ்வாயன்று காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் எழுச்சிமிகு பேரணி - ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் இயக்கம், காவல்துறை யின் அனுமதி மறுப்பு, தடையை மீறி நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டம் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் ஏராள மாகக் குவிக்கப்பட்டு பதற்றச்சூழலை உருவாக்கினர். எனினும் தடையை மீறி விவசாயிகள் ஆவேச முழக்கம் எழுப்பி பேரணியாக அணிவகுத்தனர்.
கடலூரில் காவிரிப்படுகை பாது காப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளருமான பெ.சண் முகம், மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்தி ரன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ஆறு முகம் மற்றும் கூட்டியக்கத்தில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் இயக்கங்கள், திமுக, காங்கிரஸ், மதிமுக, திக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆர்ப்பரித்து அணிவகுத்தனர். தஞ்சாவூரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் பேரணிக்கு கூட்டி யக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், விவசாயிகள் சங்க துணைத் தலைவரு மான டி.ரவீந்திரன் தலைமையேற்றார். திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிர மணியன், விழுப்புரத்தில் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், நாகப்பட்டினத்தில் மாநில செயலாளர் சாமி. நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அனைத்து இடங்களிலும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தில் இடம்பெற்றுள்ள இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.