tamilnadu

img

‘சட்டவிரோத’ மசூதியை இடித்ததற்கா அத்வானி மீது வழக்கு...?

ஹைதராபாத்:
அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது சட்ட விரோதம் என்றால், அதை இடித்த வழக்கில் பாஜக மூத்தத்தலைவர் அத்வானி சேர்க்கப்பட்டது ஏன்? பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதும் எதற்காக? என்று மஜ்லிஸ் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஓவைசி பேசியுள்ளார். அப்போதுதான் இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.“பாபர் மசூதி சட்டப்பூர்வமானது என்றால் அந்த நிலத்தை, மசூதியை இடித்தவர்களின் கைகளிலேயே ஒப்படைத்தது ஏன்? என்ற கேள்வி வருகிறது. ஒருவேளை பாபர் மசூதி கட்டப்பட்டதே ,சட்ட விரோதமானது என்றால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டது ஏன்? என்பதற்கு பதில் கிடைத்தாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.“பாபர் மசூதி தங்களின் சட்டப்படியான உரிமை. அதற்காகவே இஸ்லாமியர்கள் போராடினார்கள். நிலத்திற்காக அல்ல. எனவே, அயோத்தி தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை” என்று ஏற்கெனவே டுவிட்டர் பக்கத்தில் ஓவைசி விமர் சித்திருந்தார்.“மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம், தங்களுக்கு நிலம் கொடுத்து பிச்சைக்காரர்களை போல நடத்த வேண்டாம்” என்றும் அதில் அவர் கடுமையாக சாடியிருந்தார்.