tamilnadu

img

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: வெள்ளை அறிக்கை வெளியிடுக! கே.எஸ்.அழகிரி

சென்னை, ஆக. 30- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று தி.மு.க. தலை வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். இரு வரும் சுமார் 15 நிமிட நேரம் பேசினர். பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தி யாளர்களிடம்  பேசியபோது கூறியதா வது:- வேலூர் மக்களவைத் தொகுதி தேர்த லில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரி வித்தேன். நாங்குனேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தால் அது தொடர்பாக தி.மு.க.வுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம். தனி மனித விரோதமாக ப.சிதம்பரத்தை மத்திய அரசு கைது செய்து பழி வாங்குகிறது. சிதம்பரத்தை அதிபுத்திசாலி என்று சொல்லும் சி.பி.ஐ. தனது விசாரணையை தொலைக்காட்சி மூலம் காட்ட வேண்டியது தானே?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது பொறுப்புகளை மற்ற அமைச்சர்களிடம் பகிர்ந்து அளித்துவிட்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்ய வில்லை. வெளிநாட்டில் இருக்கும் முதலமைச்சர்  தமிழகத்திற்கு அதிக முதலீட்டை கொண்டு  வந்தால் மகிழ்ச்சி தான். ஏற்கனவே 2 முறை  உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ கத்தில் நடந்து உள்ளது. இதில் போடப்பட்ட  ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன? என்பதை அரசு வெள்ளை அறிக்கை யாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.