மதுரை, மார்ச் 15- மதுரையில் உள்ள தொற்றுநோய் ஆய்வகம் தொடர்ந்து செயல்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு முன் முயற்சி எடுக்கவேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் வலியுறுத்தினார். மதுரையில் நடைபெற்ற சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாநாட் டில் பங்கேற்க வந்த அவர் கூறிய தாவது:- தில்லியில் சாஹின்பாக் போராட் டத்தை ஒரு கலவரமாக சித்தரிக்கின்ற னர். அது பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்ப லால் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன் மறை. இந்த வன்முறையும் கூட, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற ஐந்து தொகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தில்லியில் இஸ்லாமி யர்களின் கடைகள், வணிக நிறுவனங்க ளிலிருந்து அவர்கள் வெளியேறிவிட்ட னர். பெரும்பாலோர் பாஜகவினரால் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
துடிப்புமிக்க ஜனநாயகம் சிதைப்பு...
நாட்டின் அரசியல் சாசனத்தை, கட்டுமானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான அனைத்து நட வடிக்கைகளிலும் மோடியும், அமித்ஷா வும் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் கட்ட மைப்பை சிதைப்பதற்கு வன்முறை உள்ளிட்ட எந்தவொரு நிலைக்கும் மத் திய ஆட்சியாளர்கள் செல்வார்கள். நாட்டின் துடிப்பு மிக்க ஜனநாயகம், மக்கள் ஒற்றுமை, பன்முகக் கலாச்சா ரம், பண்பாட்டு மேன்மை ஆகிய வற்றின் மீது தொடர் தாக்குதல் நடத்தப் பட்டு வருகிறது.
தமிழகம், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் துவங்கி அனைத்து விதத்திலும் ஒரு பாதுகாப்பான மாநி லம். எதிர்காலத்திலும் தமிழகம் பாது காப்பு மிக்க மாநிலமாகத் தொடர சிறு பான்மையின மக்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகமும் ஓரணியில் திரண்டு அதற்கான போராட்டங்களை முன் எடுத்து செல்லச் வேண்டும். அதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவும் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய, சு.வெங்கடேசன், கொரானோ தடுப்பு நடிவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். முகக் கவசங்கள் அரசு மருத்துவமனை, தாலுகா மருத்து வமனைகளில் வழங்க வேண்டும். மருந்துக்கடைகளிலும் முகக்கவ சங்கள் வழக்கமான விலையில் தட்டுப் பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.
தொற்றுநோய் ஆய்வகம்
மதுரையில் செயல்பட்டு வரும் தொற்றுநோய் தடுப்பு ஆய்வகத்தை மாற்றுவதற்கோ, புதுச்சேரி ஆய்வ கத்துடன் இணைப்பதற்கோ எடுக் கப்படும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். கொரோனா போன்று புதிய புதிய வைரஸ்கள் பரவினால் அதுகுறித்து ஆய்வு செய்வதற்கு தமி ழகத்தில் ஒரு ஆய்வு மையம் அவசி யம். புதிதாக ஆய்வகங்கள் திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந் துள்ள நிலையில் மதுரையில் உள்ள தொற்று நோய் ஆய்வகத்தை மூடக் கூடாது. இது தொடர்பாக தமிழக சுகா தாரத்துறை அமைச்சர் மத்திய அர சிற்கு கடிதம் எழுத வேண்டும் என்றார்.
கொரோனாவும் தமிழக அரசும்
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு கூட்டங்கள், முகாம்களை காலவரை யறையின்றி ஒத்தி வைத்துள்ளது. ஆனால், மதுரையில் ஆயிரக்கணக்கா னோரைத் திரட்டி கபாடி போட்டி, திண்டுக்கல்லில் பல்லாயிரம் பேரைத் திரட்டி தமிழக அரசு நிகழ்ச்சி நடத்து வது சரியா? எனக் கேள்வி எழுப்பிய தற்கு ? அது குறித்து அந்தக் கட்சியும், அரசும் தான் யோசிக்க வேண்டு மென்றார். ரஜினிகாந்தின் அரசியல் பிர வேசம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சு.வெங்கடேசன் 71வயது நிரம்பிய மூத்த நடிகர். அவ்வளவுதான் என்றார்.