tamilnadu

செய்தித் துளிகள்

8 மருத்துவர்களுக்கு கொரோனா

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 8 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

செங்கல்பட்டு: 7 பேருக்கு தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 423ஆக உயர்ந்துள்ளது. தற்சமயம் 352 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர்: 212 பேர் விடுவிப்பு  

கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 212 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். கோயம்பேட்டிலிருந்து வந்த தொழிலாளர்களுடன் தொடர்பில் இருந்த இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று இல்லாததையடுத்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

ஆணையர் மீது நடவடிக்கை

சாலையோரா வியாபாரிகளின் கடைகளை சேதப்படுத்திய விவகாரத்தில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிசில் தாமஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செய்தியாளர் அறை மூடல்

குற்றப்பிரிவு துறை செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள பத்திரிகையாளர் அறை மூடப்பட்டுள்ளது.

வார்னிஷ் குடித்தவர் உயிரிழப்பு

சென்னை அடுத்த திருபெரும்புதூரில் ஓட்டல் ஊழியர் சாமிநாதன்(45) என்பவர், மதுபானங்கள் கிடைக்காததால் போதைக்காக வார்னிஷ் குடித்து உயிரிழந்துள்ளார்.

குடிசை பகுதியில் முககவசம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு 50 இலட்சம் மறுபயன்பாட்டுடன் கூடிய துணியலானா முகக்கவசங்கள் மே.15 முதல் வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.