tamilnadu

img

சொத்துவரி, குடிநீர் கட்டணத்திற்கு மேலும் அவகாசம்

சென்னை, ஏப்.27- உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த  வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகிய வற்றை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் பாதிக்  கப்பட்டுள்ள சூழலில் இந்த வரிகளை செலுத்துவ தற்கு 3 மாத கால அவகாசம் கொடுக்கப்படும் என  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில  தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதன்  அடிப்படையில் சென்னை மாநகராட்சி உட்பட தமி ழகத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் 30.06.2020 வரையில் கட்டணம் செலுத்த அவகாசம்  என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மூன்று மாத கால அவகாசத்திற்கு எந்த வித அபராதமும் விதிக்கப்படாது எனவும் தமி ழக அரசு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.