districts

img

குடிநீர் கட்டணம் செலுத்தினால் மட்டுமே வேலை அட்டை தரப்படும் என அதிகாரிகள் நிர்ப்பந்தம் விவசாய தொழிலாளர்கள் சங்கம் மறியல்

தஞ்சாவூர், ஏப்.28- குடிநீர் கட்டணம் செலுத்தி னால் மட்டுமே, நூறு நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை வழங்கப்படும் என அதி காரிகள் நிர்ப்பந்தம் செய்ததால் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் திரு வோணம் ஒன்றியம் பாதிரங் கோட்டை வடக்கு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணி யாளர்கள், குடிநீர் கட்டணம் ரூ.2,500 செலுத்த வேண்டும். வீட்டு வரி, சொத்து வரி அனைத் தையும் நிலுவையின்றி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்து பவர்களுக்கு மட்டுமே வேலை அட்டை வழங்கப்படும் என அதி காரிகள் நிர்ப்பந்தம் செய்துள் ளனர்.  இதையடுத்து, ஏப்ரல் 19-ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில், அனைவ ருக்கும் வேலை அடையாள அட்டை வழங்கப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில் அதிகாரிகள் உறுதி அளித்தபடி வேலை அடையாள அட்டை வழங்கா மல். குடிநீர் கட்டணம் செலுத்து மாறு நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், அனந்தகோ பாலபுரம் கடைவீதியில், விவ சாயத் தொழிலாளர் சங்க ஒன்றி யச் செயலாளர் கே.ராமசாமி தலைமையில், ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர், கொள்ளுக்காடு கிளைச் செயலாளர் பெருமாள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யாமொழி, வீரமணி, காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், வேலை அடையாள அட்டை வழங்கப்படும் எனவும், குடிநீர் கட்டணத்தை சிறிது, சிறி தாக செலுத்துமாறும் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.