சென்னை, மே 3- சென்னை மாநகரத்தில் பல்வேறு உதவி களை செய்து வரும் தன்னார்வலர்கள் அனை வரும் தாமாகவே முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் ஏழை-எளிய உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களுக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கும் உதவிடும் வகையில் அரசியல் கட்சிகளும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் தன்னார்வலர்கள் இருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசால் நியமிக் கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரி ராதா கிருஷ்ணன் முடித்திருக்கும் வேண்டு கோளில், நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது. தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்; முக கவசம் இல்லையெனில் துணியை முகக் கவசம் போல் பயன்படுத்தலாம் என்றும் அறி வுறுத்தியிருக்கிறார். பேசும்போது சிலர் முகக்கவசத்தை கீழி றக்கியபடி பேசுகின்றனர்; அது தவறு என்றும் அதிகாரிகள் உட்பட யாராக இருந்தா லும் பெசும்போதுகூட முகக்கவசம் அணிந்தி ருக்க வேண்டும் எனவும் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
அதிகாரிகள் உட்பட யாராக இருந்தா லும் பேசும்போது கூட முகக்கவசம் அணிந்தி ருக்க வேண்டும். சென்னையில் நோய் கட்டுப் பாடுப் பகுதிகளில் 25 சதவீதம் பேர் முகக்கவ சம் அணிவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக் கிறார். திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவா லான பகுதிகளாக இருப்பதாகவும் வரும் ஒரு வாரத்திற்கு கொரோனா தொற்று எண் ணிக்கை அதிகரிக்கும்- அச்சப்படத் தேவை யில்லை என்றும் கூறியிருக்கிறார்.
கடைகளில் பணியாற்று பவர்களையும் கொரோனா பரிசோதனைக்குட்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் வீடுக ளுக்கு பொருட்கள் டெலிவரி செய்பவர்க ளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார். கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்றும் அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரி ராதாகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டி ருக்கிறார்.