tamilnadu

img

முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி.சிட்டிபாபு 100வது வயதில் காலமானார்

 சென்னை,மார்ச் 31- அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.வி. சிட்டிபாபு  ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் காலமானார். அவ ருக்குவயது 100 அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அவரது மனைவி சகுந்தலா கடந்த 2001-ஆம் ஆண்டு காலமானார்.

பேராசிரியர் சிட்டிபாபு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வரலாறு பாடப்பிரிவில் பி.ஏ (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழ கத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றார். தொடர்ந்து கல்விப் பணியில் ஈடுபட்டு  வந்த அவர், பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் துணைவேந்தராகப் பணியாற்றினார். பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய காலகட்டத்தில், கல்வி மற்றும் நிர்வா கத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். மாநில உயர்கல்வி மன்றத்தின் முதல் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். தொடர்ந்து அவர் கல்விக்காக பல்வேறு பணிகளை செய்து  வந்தார். மேலும் தமிழகத்தில் வரலாற்றின்  முக்கியத்துவத்தையும், வரலாற்றுத் துறையை வளர்க்கவும் 1994-ஆம் ஆண்டு  தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை என்ற இயக்கத்தை அவர் உருவாக்கினார்.

அவரது உடல் சென்னை மேத்தா நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்ச லிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நுங்கம்பாக்கம் மயானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.