tamilnadu

img

திருவாரூரில் ஊராட்சி பொறுப்பிற்கு 40 இடங்களில் சிபிஎம் போட்டி

திருவாரூர், டிச.15- உள்ளாட்சித் தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் 40 கிராம ஊராட்சிகளில் தலைவர் பொறுப்பிற்கு சிபிஎம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் ஊராட்சி ஒன்றியக்குழு பொறுப்பிற்கு 10 இடங்களிலும் நன்னிலம் வட்டம் மாவட்ட ஊராட்சி வார்டு எண் நான்கிலும் சிபிஎம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இதன் அடிப்படையில் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். டிச.16 அன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தேர்வு செய்யப்பட்ட அனை வரும் முழுமையாக தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்த உள்ளாட்சி தேர்த லில் அதிமுகவின் சூழ்ச்சி வலைகளை திமுக கூட்டணி முழு அளவில் வெற்றி அடையும் அளவில் திட்டமிட்டபடி தேர்தல் பணியாற்றுவது என்று கட்சியின் மாவட்டக்குழு முடிவெ டுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.