சென்னை
மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,13,058 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 22 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,994 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்று (வியாழன்) 4,486 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற மாவட்ட நிலவரம்...
செங்கல்பட்டு - 453
திருவள்ளூர் - 390
கோவை - 289
தேனி - 256
கடலூர் - 258
காஞ்சிபுரம் - 243
விருதுநகர் - 219
நெல்லை - 189
கன்னியாகுமரி - 185
சேலம் - 173
திருச்சி - 161
தஞ்சாவூர் - 154
மதுரை - 151
திருவண்ணாமலை - 150
திண்டுக்கல், வேலூர் - 141
தென்காசி - 138
புதுக்கோட்டை - 131
விழுப்புரம் - 104
மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது.நீலகிரி (7) ,கிருஷ்ணகிரி (8) ஆகிய மாவட்டங்களில் இன்றைய கொரோனா ஒற்றைப்படையில் உள்ளது.