தில்லி
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் உச்சத்தில் பரவி வருகிறது. குறிப்பாக உலகின் கொரோனா மையங்களாக உள்ள அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளை மிஞ்சும் அளவிற்கு கடந்த ஒரு மாத காலமாக தினசரி பாதிப்பு உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனால் மத்திய அரசோ வழக்கம் போல பொதுத்துறை நிறுவனங்களை வியாபாரம் செய்யும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவில் 70 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 30.43 லட்சமாக உள்ளது. மேலும் 948 பேர் ஒரே நாளில் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 56,846 ஆக உள்ளது. சிகிச்சையில் இருந்த 59,101 பேர் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22.79 லட்சமாக உள்ளது. இன்னும் 7.06 லட்சம் பேர் மருத்துவமனையில் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மற்ற நாடுகள்.... டாப் - 3
அமெரிக்கா - பாதிப்பு : 43,829, பலி : 974
பிரேசில் - பாதிப்பு : 46,210 , பலி : 823