சென்னை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நகர்ப்பகுதி, மக்கள் நெருக்கம் என்பதை அறியாத கிராம பகுதி என இரண்டு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் ஒரே வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தமிழக கொரோனா பாதிப்பு குறுகிய காலத்தில் 4 லட்சத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 97 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 6,129 பேர் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,25,456 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை நிலவரம் : இன்றைய பாதிப்பு - 1,278
வெளிமாநில, வெளிநாடு வருகை - 26