tamilnadu

img

சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு செவ்வணக்கம்

தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு உயிர்நீத்த கோவை சின்னியம்பாளையம் தியாகிகளின் 74 ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று எழுச்சியோடு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தியாகிகள் மேடையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஐ கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.