நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், கீழவெண்மணியில், செங்கொடி ஏந்தி, போராட்டம் நடத்திய வீரத் தியாகிகள், 1968, டிசம்பர்-25 அன்று, வர்க்க எதிரிகளால் தீயிடப்பட்டு மாண்ட 51-வது நினைவுதின நிகழ்ச்சிகள் டிசம்பர்-25 (நாளை), வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நடைபெறுகின்றன. சிபிஎம் மாவட்டச் செயலாளர் நாகைமாலி தலைமை வகிக்கிறார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினரும் சிஐடியு மாநிலத் தலைவருமாகிய அ.சவுந்தரராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள். கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் நன்றி கூறுகிறார்.தியாகிகளுக்கு வீர வணக்க நிகழ்வு, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.