சு.வெங்கேடசன் எம்.பி. கேள்வி
மதுரை, மார்ச் 26- பிரதமரும். முதல்வரும் கொரானோ வைரஸ் குறித்து தொடர்ந்து மக்களுக்கு நல்வழிகாட்டி, அவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புக்களை எடுத்துச் சொல்லி வருகின்றனர். பிரதமர் முதல் உள்ளூர் காவல் ஆய்வா ளர் வரை மக்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகின்றனர். மக்களின் உயிர் காக்கவே இந்தச் செயல்பாடுகள் என்பதில் சந்தேக மும் இல்லை.
அரசை எந்த வகையிலும் குறை சொல்ல இது நேரமில்லை, அரசை முன்னு தாரணமாக கொண்டு மக்கள் பிரதிநிதிக ளான நாங்களும் பொறுப்போடு நடந்து கொள்ள முயற்சிக்கிறோம். அதற்கு உதவி யாக இரண்டு விஷயங்களை மட்டும் எங்க ளுக்குத் தெரிவியுங்கள்.
இந்தியா முழுவதும் வெண்டிலேட்டர் தயாரிக்கிற நிறுவனங்களின் ஏற்றுமதியை நான்கு நாட்களுக்கு முன்பு வரை பிரதம ரும் உள்து அமைச்சரும் அனுமதித்துள்ள னர். மேற்குலக நாடுகள் மிக அதிக வெண் டிலேட்டர்களை இந்திய நிறுவனங்களிடமி ருந்து வாங்கியிருக்கிறது. இதைப்பற்றி யெல்லாம் இப்பொழுது விளக்கம் எதுவும் சொல்ல வேண்டாம். இந்திய நிறுவனங்களி டம் இப்பொழுது எவ்வளவு வெண்டிலேட்டர் கள் கைவசம் உள்ளது? உள்நாட்டு, வெளி நாட்டு நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு வெண்டிலேட்டர்களைப் பெற்று இப்பொ ழுது இந்திய மருத்துவமனை பயன்பாட்டு க்கு நீங்கள் கொண்டுவர திட்டமிட்டிருக்கி றீர்கள்?
தமிழக முதல்வரும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் தமிழ்நாடு மருந்து சேவைக் கழகம்) மூலம் N-95 முகக்கவசம் எவ்வளவு வாங்கி இருக்கிறீர்கள்? இன்றைய தேதியில் உங்கள் கையில் அப்படியொரு பொருள் இருக்கிறதா? இந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லுங்கள். கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் போராட்டத் துக்கு அடிப்படையானது வெண்டிலேட்டர். கரோனா தடுப்புக்கு மிக அவசியமானது N-95 முகக்கவசம். தேசியப்பேரிடராக அறி விக்கப்பட்டிருக்கிற கரோனா தொற்றைத் தடுக்கும் மிக அடிப்படையான இந்த இரண்டு விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் எவ்வளவு விழிப்போடு செயல் பட்டுள்ளன பாருங்கள் என்று மக்களுக்கு எடுத்துச்சொல்ல இந்த விபரங்கள் மிக முக்கியமானது.
மக்கள் பிரதிநிதிகளான நாங்களும் உங்களைப்போல விழிப்புணர்வோடு செயல்பட எங்களுக்கு உதவுகள். இவ்வாறு சு.வெங்கேடசன் மத்திய- மாநில அரசுகளிடம் கேள்வியெழுப்பி யுள்ளார்.