சென்னை, மே 19- கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால், இந்திய பத்திரிகை நிறுவனங்க ளுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழிலில் நேரடியாக வும், மறைமுகமாகவும், 30 லட்சம் பேர் ஈடு பட்டுள்ளனர். பத்திரிகை நிறுவனங்களின் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக, பத்திரிகைகளின் அகில இந்திய அமைப்பான, “இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி” எனும், ஐ.என்.எஸ். சார்பில், பிரதமர் நரேந்திரமோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக பிரத மருக்கு அழுத்தம் கொடுக்க தமிழகத்தில் உள்ள முக்கிய பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகி கள் திங்களன்று (மே 18 ) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், அனைத்து கட்சித் தலை வர்களையும் சந்தித்து நிலைமையை எடுத்து ரைத்து அந்தக் கட்சி எம்பிக்கள் கையெ ழுத்தை, கோரிக்கை மனுவில் பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாள ரும், ஐ.என்.எஸ்., துணைத் தலைவருமான ஆதிமூலம், தி இந்து பதிப்பக குழும இயக்கு னர் என்.ராம், தினத்தந்தி இயக்குனர் எஸ்.பாலசுப்பிர மணியன் ஆதித்தன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோஜ்குமார் சொந்தாலியா, தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் அம்மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல மைச்சர், பத்திரிகை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க தங்களது கட்சிகளிடம் கையெழுத்து பெறுவதுடன் பிரத மரிடமும் வலியுறுத்துவதாக உறுதி அளித்த தாக கூறப்படுகிறது.