ஈரோடு, ஜூன் 10- ஊரடங்கு விதிகளை மீறி இயக் கப்படும் பேருந்துப் போக்குவ ரத்தை முறைப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியி ருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடும் பாதிப்பை யும், பேரழிவையும் மனித சமூ கம் சந்தித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக ஊரடங்கு அமலாக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி மாநில அரசு உத்தரவு பிறப் பித்தது. இதன்படி 8 மண்டலங்க ளாகப் பிரிக்கப்பட்டு தமிழகத்தில் 50 சதவிகிதம் பேருந்துகளை இயக் கிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித் தது. ஈரோடு மாவட்டத்திலும் அரசுப் போக்குவரத்து கழகம் பேருந்து களை இயங்கி வருகிறது. இப்பணி யில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவ ரத்து கழகங்கள் பயணியர் கைகளை சுத்தம் செய்தபின் பின் படிக்கட்டில் ஏறி, முன் படிக்கட்டின் வழியாக இறங்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு உட்படுத் திட வேண்டும். ஒவ்வொரு நடைக் கும் பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மொத்த இருக்கைகளில் 60 சதவி கித இருக்கைகள் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும் போன்ற வழிகாட்டு விதிகளை பின்பற்ற தமிழக அரசு அறிவித் துள்ளது.
ஆனால் இவ்விதிகள் பின் பற்றப்படவில்லை. குறிப்பாக ஈரோடு மாவட்டத் தில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்கும் அளவிற்கு பேருந்து கள் இயக்கப்படுகிறது. இது குறித்து போக்குவரத்து அதிகாரி களிடம் கேட்கும் போது அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற முயற்சிக்கிறோம் என தெரிவித்த னர். மருத்துவர்களும், விஞ்ஞானிக ளும் கூறுவது போல கொரோனா நோய்த் தொற்று அடுத்து வரக்கூ டிய மாதங்களில் கூடுதலான, கடுமையான பாதிப்புகளை உருவாக் கக் கூடும்.
இச்சூழ்நிலையில், வழி காட்டு விதிமுறைகளை மீறி செயல்படுவது அரசு போக்குவரத்து தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கடுமையான பாதிப் பிற்குள்ளாக வழிவகை செய்தி டும். எனவே மாவட்ட நிர்வாகம் துரி தமாக செயல்பட்டு பாதிப்புகள் ஏற்ப டாதவாறு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என தெரிவித் துள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகம் பேருந்து போக்குவரத்தில் விதிமு றைகளை மீறுவதைத் தடுப்பதில் கவனம் செலுத்தவில்லை எனில் பேருந்து நிலையங்கள் முன்பு ஊர டங்கு நடைமுறையை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மனுவில் கூறியுள்ளார். .