ஸ்பெயின் நாட்டின் முக்கிய கிளப் கால்பந்து தொடரான லா லிகா தொடரில் தற்போது லீக் சுற்று நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். செவ்வாயன்று பார்சிலோனா வில்லரியல் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற் றது. பரபரப்பாகத் தொடங்கி மந்த மாக நிறைவு பெற்ற இந்த ஆட்டத்தில் மெஸ்ஸிக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. நடப்பு சீசன் லா லிகா தொடரில் மெஸ்ஸி இருந்த பொழுதே பார்சிலோனா அணி கடுமையாகத் திணறி வருகிறது. தற்போது அவரும் காயமடைந்திருப்பதால் பார்சிலோனா ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.