பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து வரும் ஐபிஎல் டி-20 தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், பிளேஆப் சுற்றுகள் செவ்வாயன்று தொடங்குகின்றன. லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த சென்னை, மும்பை, தில்லி, ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்கேற்கும் பிளே ஆப் சுற்றின் முதல் குவாலிபயர் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.தோற்கும் அணி தில்லி - ஹைதராபாத் அணிகள் மோதும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியோடு மோதும்.இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
முதல் குவாலிபயர்
சென்னை - மும்பை
(செவ்வாய்) மே 7
எலிமினேட்டர்
தில்லி - ஹைதராபாத் (புதன்) மே 8
2வது குவாலிபயர் (வெள்ளி) மே 10