tamilnadu

img

பாரதியார் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெறுக இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, அக்.1- பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டண உயர்வை திரும்பப் பெற வேண் டும் என இந்திய மாணவர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்டக் குழு அலுவலகத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாரதியார் பல்கலைக்கழகம் நடப்பு பருவத்தேர்வுக்கான தேர்வு கட்ட ணத்தை உயர்த்தி உள்ளது. இது கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பல் கலைக்கழகத்தில் ஏராளமான ஊழல் முறை கேடு, நிர்வாக சீர்கேடு மற்றும் வீண் செல வுகளை குறைக்காமல் நிதி பற்றாக்குறை என்பதனை காரணம் காட்டி தேர்வு கட்ட ணத்தை உயர்த்தி அதனை மாணவர்கள் தலையில் சுமத்துவது கண்டனத்துக்குரி யது. மேலும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு  அலுவலர், டீன் உள்ளிட்ட காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் பல் கலைக்கழக நிர்வாக கமிட்டி மட்டுமே தன்னிச்சையாக இம்முடிவை மேற்கொண் டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.  எனவே உயர்த்தப்பட்ட தேர்வு கட்ட ணங்களை பாரதியார் பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் தேர்வு கட்டணத்தை மாணவர்களுக்கு உடனே திருப்பி வழங்க வேண்டும் அல்லது அடுத்த பருவத் தேர்வு கட்டணத்தில் கழித்து கொள்ள வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுக்கின் றன.  மேலும் பாரதியார் பல்கலைக்கழக முது நிலை விரிவாக்க மையம் பிஜி தனியார் கல்லூரி கட்டிடத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் வாடகை கொடுத்து இயங்கி வருகிறது. ஆனால் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு கலை அறி வியல் கல்லூரிகளில் அதற்கான போது மான இடம் இருந்தும் அங்கு நடத்தாமல் தனியார் கல்லூரி லாபம் பெறும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம்செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி பெறு வதை உத்தரவாதப்படுத்த பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தை பல்வேறு இடங்களில் துவக்கி வைத்தார்.  ஆனால் பாரதியார் பல்கலைக்கழகம் ஒரு தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் நடத்த  அனுமதி கொடுத்திருப்பது மாணவர்கள் பயன் பெறுவதை தடுக்கும் வகையில் உள்ளது. பாரதியார் பல்கலைக்கழக முது நிலை விரிவாக்க மையத்தை சிக்கய்ய கல்லூரிக்கு மாற்றுவது தொடர்பாக முன்னாள் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் ஆய்வு மேற்கொண்டு அதற்கு இசைவு தெரிவித்து ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட் டது. ஆனால் தற்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தனியார் கல்வி நிறுவனத்தி டம் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் கையூட்டு பெற்றுக் கொண்டு தாமதப்ப டுத்துவது தெரியவருகிறது. எனவே பார தியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க  மையத்தை உடனடியாக சிக்கய்ய நாயக்கர் கல்லூரிக்கு மாற்றி ஏழை எளிய மாணவர் கள் முதுகலை படிப்பு பயில வழிவகை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  மேலும், பாரதியார் பல்கலைக்கழ கம் தேர்வு கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை மாணவர்களுக்கு உடனே திருப்பி வழங்க வேண்டும். சிக்கய்ய நாயக்கர் கலை அறிவி யல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். மேலும் உச்சநீதி மன்ற உத்தரவின்படி சிக்கய்ய நாயக்கர் கல் லூரியை அரசு கல்லூரியாக தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும் என வலி யுறுத்தி வருகின்ற அக்.15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்து வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதில், அக். 15 தேதியன்று கோரிக் கைகளை விளக்கி மாணவர்கள் பொது மக்கள் மத்தியில் நோட்டீஸ் விநியோகிப் பது, அக். 16 ஆம் தேதியன்று அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம், அக்.17 ஆம் தேதியன்று கோரிக்கைகளை வலியு றுத்தி கையெழுத்து இயக்கம், அக்.18 ஆம் தேதியன்று கருப்பு அடையாள அட்டை அணிந்து போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்த சந்திப்பின்போது சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஜி.கோபி கிருஷ்ணன்,  மாவட்ட துணைச் செயலாளர் நவீன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி, யோகேஷ் ஆகியோர் உடனி ருந்தனர்.