புதுச்சேரி, மார்ச் 27- நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று ஜிப்மர் பாது காப்புக்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஜிப்மர் பாதுகாப்புக்குழு தலைவரு மான தா.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது: ஜிப்மர் நிர்வாகம் மீண்டும் ஏழை, எளிய நோயாளிகளிடம் ரத்தம் மற்றும் உயர்நிலை பரிசோதனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற சுற்றறிக்கையை மார்ச் 16 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மூலம் நிர்வாக இயக்குநரின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ளது. உயர்நிலை பரிசோதனைகளுக்கு மட்டும் கட்ட ணம் வசூலிக்கப்படும் என்ற சுற்றறிக்கையில் மற்ற சாதாரண பரிசோதனைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆயூஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர்க ளாக இல்லாதவர்களும் சிவப்பு நிற உணவு பங்கீட்டு அட்டை இல்லாத ஏழை, நோயாளிகளும் உயர்நிலை பரிசோதனைகளுக்கு வரும் 1ஆஆம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஜிப்மர் நிர்வாகத்தால் சாமானிய மக்கள் மீது மறைமுகமாக திணிக் கப்பட்டுள்ள இந்த பரிசோதனை கட்டணங்கள், நாடாளுமன்றத்தில் 2008ஆம் ஆண்டு இயற்றப் பட்ட ஜிப்மர் தன்னாட்சி சட்டம் 19இல் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு முற்றி லும் முரணாக உள்ளது. ஜிப்மர் சட்டம்-19:2008இன் வரிசை எண் 13 மற்றும் உட்பிரிவு 13இன் கீழ் மருத்துவமனைகளில் வழங்கப்படு வது போல் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் நிர்வாக இயக்குநர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஆகிய இருவரும், நாடாளுமன்றத்தால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக இயற்றப்பட்ட 13இன் பிரிவை நிராகரித்துவிட்டு, தன்னிச் சையாக, உயர்நிலைப் பரிசோதனை களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று எடுத்த முடிவு ஒட்டு மொத்த இந்திய ஜனநாயகத்தையே கேள்விக் குறியாக மாற்றியுள்ளது. நோயாளிகளின் கோயிலாக விளங்கும் ஜிப்மர் மருத்துவ மனையை, மருத்துவ கண்காணிப் பாளர் தன்னுடைய சனாதனத்திற்கு ஏற்ப மாற்றுவதை கைவிட வேண்டும். புதுவை, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில மக்களின் நியாயமான கோரிக் கைகளுக்கு செவி சாய்த்து, புதிய கட்டண சுற்றறிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும். இந்திய திருநாட்டின் தலைம கள் (இந்திய ஜனாதிபதி) அவர்க ளுக்கு கிடைக்கும் உயர்தர மருத்துவ வசதிகள், ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக கிடைக்க வழி வகை செய்யும் ஜிப்மர் தன்னாட்சி சட்டத் திற்கு ஜிப்மர் நிர்வாகம் மதிப்பளிக்க வேண்டும் என புதுவை மற்றும் தமிழ்நாடு மக்களின் சார்பாக கேட்டுக்கொள்வதோடு, புதிய கட்டண சுற்றறிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும். மேலும் ஜிப்மர் பாதுகாப்பு குழு மற்றும் புதுவையைச் சார்ந்த வெகு ஜன அமைப்புக்களின் இடைவிடாத போராட்டத்தால், நாடாளுமன்ற சுகாதார நிலைக்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டு, ஜிப்மர் தன்னாட்சி சட்டம் 19/2008இல் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை தொடர வேண்டும் என்ற நிலையிலிருந்து விலகி, ஜிப்மர் நிர்வாகமே தன்னிச்சையாக கட்டண உயர்வு என்ற முடிவினை எடுக்கும் பட்சத்தில், புதுச்சேரி மற்றும் தமிழ் நாடு மக்களை ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப் படும் என்று ஜிப்மர் நிர்வாகத்தையும், ஒன்றிய அரசையும் எச்சரிகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.