பெரம்பலூர், ஆக.4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சாமி.நடரா ஜன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, அ.கலை யரசி, எஸ்.அகஸ்டின், எஸ்.பி.டி.ராஜாங்கம், ஆர்.கோகுலகிருஷ்ணன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம் மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை யால் ஏழை - எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலையும். எனவே இந்த வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சென்னையில் நடைபெற்ற குடும்ப வன் முறை எதிர்ப்பு மாநாட்டு முடிவுகளின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 அன்று சமத்துவ ஜனநாயக மிக்க ஆரோக்கிய மான குடும்பங்களை உருவாக்க கல்வி நிலையங்கள், பொது இடங்களில் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச் சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆக. 9 முதல் 15 வரை தேச விடுதலை போராட்ட நிகழ்வுகளை நினைவு படுத்தி, அரசியல் சாசனத்தின் சமத்துவ மதச்சார்பற்ற ஜனநாயக அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை யொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளிலும் தேசியக்கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. மோடி அரசின் 8 ஆண்டு கால ஆட்சியின் கொடுமைகளை கண்டித்து ஆகஸ்ட் 25 முதல் 31 வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ரூ. 55 முதல் 1,130 வரை மின் கட்டணம் உயரும் என மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின்கட்டண உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும் வாடகை வீடு களில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். எனவே மின் கட்டண உயர்வை உடனடி யாக திரும்பப் பெற வலியுறுத்தி மின்வாரிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட் டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 அன்று பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.