திருச்சிராப்பள்ளி, டிச.28- நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை மண்டல மேலாளராக நியமனம் செய் வதை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில் புதனன்று திருச்சி மண்டல மேலாளர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண் டல தலைவர் வேலு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநிலச் செயலாளர் ராசப் பன், சிஐடியு மாநகர் மாவட் டச் செயலாளர் ரெங்க ராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார், கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் வின்சென்ட் ஆகியோர் விளக்கிப் பேசி னர். சங்க மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட துணைத்தலைவர்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர். நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை மண்டல மேலாளராக நியமனம் செய் வதை திரும்பப்பெற வேண் டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பணியாளர்களின் பணியிட மாற்றங்களில் பாரபட்சம் பார்க்க கூடாது. கழக பணி யாளர்களுக்கும் அரசு ஊழி யர்களுக்கு இணையான பென்சன் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய சுமைப் பணி தொழிலாளர்களை நிய மனம் செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.
திருவாரூர்
திருவாரூர் எஸ்ஆர்எம் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் ஆர்.அண்ணாதுரை தலைமை வகித்தார். டிஎன்சிஎஸ்சி மாநி லத் துணை பொது செயலா ளர் ஆர்.மோகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்டத் தலைவர் அனிபா, மாவட்ட துணை தலைவர் கே.பி. ஜோதிபாசு, மண்டலப் பொருளாளர் ராஜா மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழ கம் பொது தொழிலாளர் சங் கம் மற்றும் சிஐடியு நிர்வாகி கள் பலர் கலந்து கொண்ட னர்.