திருச்சிராப்பள்ளி, ஏப்.28- திருச்சி மாநகராட்சிக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 32ஆவது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஜெய நிர்மலா மண்ட லம் எண் 2இல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக்கொண்டார். திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, பகுதி செயலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.