tamilnadu

img

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விடுவிக்கக்கோரி பொதுமக்கள் ஆவேசம்

கோபி, ஜுலை 9 - கோபிசெட்டிபாளையம் நகராட் சியில் கொரோனா தொற்று காரண மாக தனிமைப்படுத்தப்பட்ட பகு தியை விடுவிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட் டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கமலா ரைஸ் மில் வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பேருந்து நிலையம் பகுதியில் செயல்படும் பிரபல ஜவு ளிக்கடையில் பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற் பட்டதையடுத்து சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்பின், அப்பெண்மணி குடியிருந்த கமலா ரைஸ்மில் வீதியில் 25 வீடுகளில் உள்ள 80க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண்மணி குணமடைந்து புதனன்று இரவு வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய பெண்மணி தனக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், நோய்த்தொற்று இல்லாம லேயே சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.

அதனால் கமலா ரைஸ்மில் வீதியை சேர்ந்த பொதுமக்கள், கொரோனா தொற்று இல்லாத நிலையில் தங்களை ஏன் தனிமைப்படுத்தியுள்ளீர்கள் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட வீதியை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தடுப்புகளின் அருகில் வந்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இத்தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை உதவி ஆய் வாளர் ஆகியோர் சம்பவ இடத்த்திற்கு வந்து பொதுமக்களிடம் விளக்கம் அளித்தனர். மேலும் மாவட்ட நிர் வாகத்தினர் உத்தரவின் பேரில் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், உரிய காலத்தில் மாவட்ட அலுவலகத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.