புதுதில்லி:
கடந்த 2017-ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், 17 வயது இளம் பெண்ணை கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், பாஜகஎம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்க வேண்டும் என்று தில்லி தீஸ் ஹசாரிநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரூ.25 லட்சம் அபராதமும் விதித்துள் ளது.மேலும், அபராதத் தொகையில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அளிப்பதுடன்; அவரது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும்சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.இந்நிலையில், “செங்காருக்கு ஆயுள்தண்டனை போதாது; மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று உன்னாவ் பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.“குல்தீப் சிங் செங்காருக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் முழுமையான நீதியைப் பெற முடியும்.அவருக்கு ஆயுள் சிறைத்தண் டனை விதித்து அளித்த தீர்ப்பில் எங்களுக்கு திருப்தி இல்லை. அவர் என்றோ ஒரு நாள் வெளியே வந்தால் எங்கள் அனைவரையும் கொன்று விடுவார்” என்று பாதிக் கப்பட்ட பெண்ணின் தாயாரும், சகோதரியும் கூறியுள்ளனர்.