tamilnadu

img

உடனடியாக நிலுவை தொகையை வழங்கிடு கரும்பு விவசாயிகள் போராட்டம்

கோபி, பிப்.17- கரும்பு விவசாயிகளுக்கு வரவேண்டிய 60 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து வரும் சர்க்கரை ஆலையை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியில் சக்தி சர்க்கரை ஆலை செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலை நிர்வாகம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு  கரும்பு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்பிற்கான பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து  வந்துள்ளது. இது தொடர்பாக விவசாயி கள் ஆலை நிர்வாகத்திடம் பலமுறை வலியு றுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நூற்றுக் கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கையில் கரும்பு ஏந்தியபடி ஆலையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது கடந்த 5 ஆண்டுகளாக பயிர்  கடன் பிடித்த 10 கோடி ரூபாயை சர்க்கரை ஆலை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். நிலு வையில் உள்ள 60 கோடி ரூபாயை விவசா யிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பதிவு செய்யப்படாத கரும்பை வெட்டும் நடவடிக்கையை ஆலை நிர்வா கம் கைவிட வேண்டும். சர்க்கரை கொள்மு தல் செய்தவுடன் 16 தினத்தில் கொள்மு தல் விலையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்நிறுத்தி முழக்கமிட்டனர். தடையை மீறி முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆப்பக் கூடல் காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப்போராட்டத்திற்கு சக்தி ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் கோபி நாத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு  கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில  பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் முனுசாமி, மாநிலத்துணைத் தலைவர் நல்லாக்கவுண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.