tamilnadu

img

அ.கணேசமூர்த்திக்கு ஓய்வூதியர்கள் ஆதரவு

ஈரோடு, ஏப். 4-

மத்திய,மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்அ.கணேசமூர்த்திக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில், அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் நிர்வாகி என்.ராமசாமி, தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஈரோடு மாவட்ட செயலாளர் மணிபாரதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் நிர்வாகி எஸ்.ஜெயராமன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் நிர்வாகி எஸ்.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.